search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஸ்கேன் சென்டர்"

    • தமிழகம் முழுவதும் ஸ்கேன் மையங்கள், உரிமையாளர் வீடு, மருத்துவமனை வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.
    • மருத்துவமனை, ஸ்கேன் மையம் மற்றும் வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் தொடர்பாக கோவிந்தராஜன் மனைவி மருத்துவர் கோமதி, ஊழியர்களிடம் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவில்பட்டி:

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்தவர் கோவிந்தராஜன்.

    இவர் சென்னையை தலைமை இடமாக கொண்டு தமிழகம் மட்டுமின்றி, நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் ஆர்த்தி ஸ்கேன், லேப்ஸ் என்ற நிறுவனத்தினை நடத்தி வருகிறார்.

    இந்நிலையில் தமிழகம் முழுவதும் ஆர்த்திஸ்கேன் மையங்கள், உரிமையாளர் வீடு, மருத்துவமனை என கடந்த 7-ந் தேதி 25 இடங்களுக்கு மேல் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

    கோவில்பட்டியிலும் அண்ணா பஸ் நிலையம் அருகே உள்ள ஆர்த்தி மருத்துவமனை, ஆர்த்தி ஸ்கேன், உரிமையாளர் வீடு மற்றும் ஆர்த்தி திருமண மண்டபம் என உள்ளிட்ட இடங்களில் 5 குழுக்களாக வருமான வரித்துறையினர் பிரிந்து கடந்த 2 நாட்களாக தொடர்ந்து சோதனை நடத்தி வந்தனர்.

    3-வது நாளாக இன்றும் சோதனை நீடித்து வருகிறது. மருத்துவமனை, ஸ்கேன் மையம் மற்றும் வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் தொடர்பாக கோவிந்தராஜன் மனைவி மருத்துவர் கோமதி, மருத்துவமனை ஊழியர்களிடம் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சென்னையில் வடபழனி, மடிப்பாக்கம், ராயப்பேட்டை உள்பட பல இடங்களில் ஸ்கேன் சென்டர்களில் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது.
    • ஸ்கேன் சென்டர்களில் பணியாற்றும் மருத்துவர்களின் வீடுகளிலும் சோதனை நடந்து வருகின்றன.

    சென்னை:

    பிரபல தனியார் ஸ்கேன் மையத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். சென்னை உள்பட பல்வேறு நகரங்களில் தனியார் ஸ்கேன் சென்டர் செயல்பட்டு வருகிறது.

    மருத்துவர்களின் அறிக்கை அடிப்படையில் நோயாளிகளுக்கு பல்வேறு தொழில்நுட்ப வசதிகளுடன் பல்வேறு பகுப்பாய்வு இந்த சோதனை கூடங்களில் நடக்கிறது. சென்னையில் வடபழனி, மடிப்பாக்கம், ராயப்பேட்டை உள்பட பல இடங்களில் இந்த ஸ்கேன் சென்டர்களில் இன்று காலையில் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது.

    தமிழகம் முழுவதும் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த சோதனை நடந்து வருவதாக தெரிகிறது.

    மேலும் இந்த ஸ்கேன் சென்டர்களில் பணியாற்றும் மருத்துவர்களின் வீடுகளிலும் சோதனை நடந்து வருகின்றன. வரி ஏய்ப்பு செய்ததாக பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் இச்சோதனை நடத்தப்படுவதாக துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ஒவ்வொரு மையங்களிலும் வருமான வரித்துறை அலுவலர்கள் ரகசியமாக இந்த சோதனையை மேற்கொண்டனர். தமிழகம் முழுவதும் ஒரே நேரத்தில் அங்கு பணிபுரியக்கூடிய முக்கிய டாக்டர்கள் மற்றும் நிர்வாகிகளிடமும் விசாரணை நடக்கிறது. வருமானத்துறைக்கு வந்த முக்கிய ரகசிய தகவல் அடிப்படையில் சோதனை நடத்தப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

    ×